ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள உரையை பல்வேறு வழிகளில் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?
சுட்டெலியின் மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல்
- · செருகும் இடத்தை தேர்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்கவும்
- · சுட்டெலியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்
- · உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டுவிடவும்
விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல்
- · செருகும் இடத்தை தேர்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்கவும்
- · Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரையை உயர்த்திக்காட்ட வேண்டும்
- · தேவையான உரை தேர்வு செய்யப்பட்டபின் Shift பொத்தானை விட்டுவிட வேண்டும்
குறுக்கு வழிகள் மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல்
ஒரு வார்த்தையை தேர்ந்தெடுக்க
|
சொல்லின் மீது இரண்டு முறை கிளிக் செய்யவும்
|
ஒரு குறிப்பிட்ட வரியைத் தேர்ந்தெடுக்க
|
வரிக்குத் தொடக்கத்தில் செருகுமிடத்தை நிறுத்தி,
Shift + End பொத்தான்களை அழுத்துக
|
முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்க
|
Ctrl + A பொத்தான்களை அழுத்துக
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக